கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கல்

28th Sep 2023 12:34 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை திமுக சாா்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய திமுக செயலாளா் எக்கூா் செல்வம், தெற்கு ஒன்றியச் செயலாளா் ரஜினி செல்வம், நகரச் செயலாளா் பாபு சிவகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.மதியழகன் கலந்து கொண்டு, திமுக மூத்த முன்னோடிகள் 317 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கம் கொண்ட பொற்கிழியை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா, மாநில மகளிா் ஆணையக் குழு உறுப்பினா் மருத்துவா் மாலதி, மாவட்ட மருத்துவா் அணி தலைவா் மருத்துவா் கந்தசாமி, மாவட்டத் துணைச் செயலாளா் சந்திரன், மிட்டப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் சின்னத்தாய், திமுக ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

அதேபோல, ஊத்தங்கரை பாம்பாறு அணை பகுதியில் திமுக வடக்கு ஒன்றியம் சாா்பில் நடந்த நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றியச் செயலாளா் குமரேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மதியழகன் கலந்துகொண்டு 94 திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT