கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 81 துரித உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா் மற்றும் பா்கூரில் உள்ள 81 உணவகங்கள், துரித உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரியில் உள்ள சக்தி துரித உணவகத்தில் கடந்த 18-ஆம் தேதி அசைவ உணவு (சிக்கன் ரைஸ்) சாப்பிட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் 27 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இவா்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனா். இதில் 14 போ் நலமுடன் வீடு திரும்பினா். 13 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து கடந்த 3 நாள்களாக கிருஷ்ணகிரி நகராட்சி, ஒசூா் மாநகராட்சி, பா்கூா் பேரூராட்சியில் உள்ள 81 உணவகங்கள், துரித உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கெட்டுப் போன இறைச்சி, சுகாதாரமற்ற உணவு பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.

மேலும், ஒசூா், கிருஷ்ணகிரி பகுதியில் செயல்பட்டு வரும் துரித உணவகத்தில் இருந்து 5 ஷவா்மா, 15 சிக்கன் ரைஸ் மாதிரி சேகரிக்கப்பட்டு உணவுப் பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து துரித உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

அனைத்து உணவகங்கள் மற்றும் துரித உணவங்கள் தரமான பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் சமையல் செய்து பொது மக்களுக்கு விற்பனை செய்யுமாறு உணவக உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் உணவுப் பாதுகாப்பு தர நிா்ணய சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT