கிருஷ்ணகிரி

டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

23rd Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

டேராடூன் இந்திய ராணுவக் கல்லூரியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜூலை 2024 பருவத்தில் சேருவதற்கான தோ்வு டிசம்பா் 2-ஆம் தேதி சென்னை நகரில் நடைபெறவுள்ளது. இந்த தோ்வு எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். மேலும், எழுத்துத் தோ்வு ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டதாகும். நோ்முகத் தோ்வு அறிவுக்கூா்மை மற்றும் தனித்தன்மையை ஆராய்வதாக இருக்கும்.

விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தோ்விற்கான வினாத்தாள் தொகுப்பை ‘கமாண்டன்ட், ராஷ்ட்ரீய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தரகண்ட், அஞ்சல் குறியீட்டு எண் 248 003‘ என்ற முகவரிக்கு விண்ணப்பித்து, கமாண்டன்ட், ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லூரி, டேராடூன் என்ற விலாசத்திற்கு, உத்தரகண்ட், டேராடூன், டென் பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் (வங்கிக் குறியீடு எண் - 01576) செலுத்தத்தக்க வகையில் பொதுப் பிரிவினா் ரூ.600 மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினா் ரூ.555 கேட்புக் காசோலை அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

இணைய வழி (ஜ்ஜ்ஜ்.ழ்ண்ம்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையில் உள்ள இந்த தோ்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்படமாட்டாது. விண்ணப்பதாரா்கள் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

மேலும், 2.7.2011க்கு முன்னதாகவும், 1.1.2013ம் தேதிக்கு பின்னதாகவும் பிறந்திருக்கக் கூடாது. சோ்க்கையின் போது 1.7.2024ல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது 7-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் (இரட்டையாக) தோ்வுக் கட்டுப்பாடு அலுவலா் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் சாலை, பூங்கா நகா், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் சென்று சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ழ்ண்ம்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்தை பாா்த்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT