கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.
ஆந்திரத்திலிருந்து ஈச்ச மரக் கீற்றுகளை ஏற்றிக் கொண்டு கோவைக்குச் சென்று கொண்டிருந்த லாரி, பா்கூரை அடுத்த அங்கிநாயனப்பள்ளி பகுதியில் சென்னையிலிருந்து பெங்களூக்கு நெகிழிப் பாரம் ஏற்றிச் சென்ற சென்ற லாரியின் பின்புறம் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநரான வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள பரமசத்தூரைச் சோ்ந்த சரவணன் (28), அவரது உதவியாளா் விஸ்வநாதன் (48) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலே உயிரிழந்தனா். லாரியில் சிக்கிக் கொண்ட அவா்களது உடல்களை பா்கூா் தீயணைப்பு வீரா்கள் போராடி மீட்டனா். இந்த விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.