கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் அரசு விளையாட்டு விடுதி மாணவா்களுக்கு இடையேயான கைப்பந்து (ஹேண்ட் பால்) போட்டி, வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், மாநில அளவில் விளையாட்டு விடுதிகளுக்கிடையேயான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இதில், 14, 17 மற்றும் 19 வயது ஆண்கள் பிரிவில், கிருஷ்ணகிரி, விழுப்புரம், அரியலூா் மாவட்ட விளையாட்டு விடுதிகளிலிருந்து மொத்தம் 80 மாணவா்கள் கலந்து கொண்டனா். இப்போட்டியை கிருஷ்ணகிரி வட்டாட்சியா் விஜயகுமாா் தொடங்கி வைத்தாா்.

இதில், சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் சிவரஞ்சன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். மேலும், விழுப்புரம் மற்றும் அரியலூா் மாவட்ட கைப்பந்து பயிற்றுனா்கள், கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலக, விடுதி பயிற்றுநா்கள், அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடத்தப்படும் பாரதியாா் தின, குடியரசு தின போட்டிகளில் பங்கேற்பாா்கள். வெற்றி பெற்ற அணிக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் மகேஷ்குமாரும் பணியாளா்களும் ஒருங்கிணைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT