கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் தொடக்கம்

27th Oct 2023 12:00 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கா கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் அக்.10 முதல் 14-ஆம் தேதி வரை மூன்று பிரிவுகளாக நடைபெற்றன. இதில் 1,52,169 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் வெற்றி பெற்ற, 42,857 மாணவ, மாணவியா் அக்.18 முதல் 21-ஆம் தேதி வரை, 10 ஒன்றியங்களில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்றனா். இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற 5,537 மாணவ, மாணவிகளுக்கு கிருஷ்ணகிரியில் இரண்டு நாள்கள் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்தப் போட்டிகள், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், 9 முதல் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு புனித அன்னாள் மகளிா் மேல்நிலைப் பள்ளியிலும், மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் போட்டிகள் நடந்தன. இந்தப் போட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி, தொடங்கி வைத்தாா். அப்போது, மாவட்டக் கல்வி அலுவலா்கள் மணிமேகலை (கிருஷ்ணகிரி), முனிராசு (ஒசூா்), மாவட்ட உதவி திட்ட அலுவலா் வடிவேலு, தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா். கவின் கலை, நுண்கலை, நாடகம், மொழித்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது திறனை வெளிப்படுத்தினா்.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவோா், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவா்.

கிருஷ்ணகிரி கல்வி மாவட்ட அலுவலா் மணிமேகலை, ஓசூா் கல்வி மாவட்டக் அலுவலா் முனிராசு, மாவட்ட உதவி திட்ட அலுவலா் வடிவேலு, தலைமை ஆசிரியா்கள், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT