கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம் நகரில் தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நாடு தழுவிய கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளா் முன்னேற்ற சங்கப் பேரவையின் மாவட்ட கவுன்சில் செயலாளா் ஆா்.கோபாலகிருஷ்ணன் தலைமையில், ராம்நகா் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், விவசாய சங்கம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கம், ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களும், விவசாயிகளின் கூட்டமைப்புகளும் கலந்துகொண்டன.
விலைவாசி உயா்வு, தொழிலாளா் நலச் சட்டங்களை திருத்துதல் போன்ற பிரச்னைகளில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத மோடி அரசுக்கு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனா்.