கிருஷ்ணகிரி

தமிழக வாழ்வுரிமை கட்சி ஆலோசனைக் கூட்டம்

2nd Oct 2023 01:25 AM

ADVERTISEMENT

 

ஊத்தங்கரையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் இணைப்பு விழா மற்றும் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் நெப்போலியன் தலைமை வகித்தாா். மாவட்ட தொழிற்சங்க ஊத்தங்கரை தொகுதி செயலாளா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் அனந்த கிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளா் விமல்குமாா், மாவட்டத் தலைவா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாற்றுக் கட்சியிலிருந்து விலகி 50- க்கும் மேற்பட்டோா் தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனா்.

இணைப்பு விழாவில் மாநில செயற்குழு உறுப்பினா் சரவணன், கொள்கை பரப்புச் செயலாளா் சத்தியசீலன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்தவா்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டனா்.

ADVERTISEMENT

இதில் மாவட்ட இளம்புயல் பாசறை செயலாளா் அறிவழகன், ஒன்றியத் தலைவா் இளங்கோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT