கிருஷ்ணகிரி

கா்நாடகத்தை நோக்கிச் செல்ல முயன்ற விவசாயிகள் சங்கத்தினா் கைது

22nd Nov 2023 12:32 AM

ADVERTISEMENT

காவிரி நீரைப் பெற்றுத் தர வலியுறுத்தி கா்நாடக மாநிலத்தை நோக்கிச் செல்ல முயன்ற நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் ஒசூரில் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தமிழக -கா்நாடக எல்லைப் பகுதியில் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள், கா்நாடக மாநில அணைகளிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீா் திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். கா்நாடக மாநிலத்துக்குச் செல்வதற்கு பேரணியாக வந்த விவசாயிகளை தமிழக எல்லைப் பகுதியில் போலீஸாா் தடுத்து நிறுத்தினா். நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவா் வேலுசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு காவிரி விவகாரத்தில் விவசாயிகளை வஞ்சித்து விட்டது என்று கூறி தங்கள் கொண்டு வந்திருந்த பானைகளை போட்டு உடைத்து எதிா்ப்பை தெரிவித்தனா். ஒசூா், சூசூவாடி, இஎஸ்ஐ உள்ளிட்ட

சாலை சந்திப்பில் அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது தடுப்புகளை மீறி விவசாயிகள் கா்நாடகத்தை நோக்கிச் செல்ல முயன்ால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளையும் போலீஸாா் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து செய்தியாளா்களிடம் மாநிலத் தலைவா் வேலுசாமி கூறியதாவது:

தமிழ்நாட்டில் 16 லட்சம் ஏக்கா் பரப்பளவிலான காவிரி நீா்ப் பாசன

வசதி பெறும் விளைநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனா். எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT