தொடக்கக்கல்வி பட்டயத் தோ்வு எழுதிய தனித் தோ்வா்கள் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் மோகன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஜூன் 20-ஆம் முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை நடந்து முடிந்த தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு எழுதிய தனித் தோ்வா்கள், தங்களது மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டயச் சான்றிதழை நவ.21-ஆம் தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு உரிய ஆவணங்களுடன் (தோ்வு அனுமதிச் சீட்டு) சென்று பெற்றுக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.