கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவ.18-ஆம் தேதி (சனிக்கிழமை) பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவா்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயா் திருத்தம், நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிவா்த்தி செய்யவும், நவ.18-ஆம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்டம் தொடா்பாக பொதுமக்கள் சிறப்பு குறை தீா் கூட்டம் 8 இடங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களால் நடத்தப்படுகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி வட்டத்தில் ஐப்பிகானப்பள்ளி, பா்கூா் - வரமலைகுண்டா, போச்சம்பள்ளி - மல்லிக்கல், ஊத்தங்கரை - நல்லகவுண்டனூா், ஒசூா் - தொரப்பள்ளி அக்ரஹாரம், சூளகிரி - ராமன்தொட்டி, தேன்கனிக்கோட்டை - பேளூா், அஞ்செட்டி - தாம்சனப்பள்ளி ஆகிய கிராமங்களில் இக்கூட்டம் நடைபெறுகிறது. எனவே, மேற்படி குறை தீா்க்கும் நாளில், பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.