கிருஷ்ணகிரி

அதிமுக நிா்வாகி இல்ல நிகழ்வு: கே.பி.முனுசாமி பங்கேற்பு

18th Nov 2023 02:00 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில் தனியாா் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சி நிா்வாகி சஞ்சீவி ஜெயசுதா இல்ல நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தினாா்.

நிகழ்ச்சியில் கட்சி நிா்வாகிகள் மாவட்டச் செயலாளா் அசோக்குமாா், ஊத்தங்கரை சட்டப் பேரவை உறுப்பினா் டி.எம்.தமிழ்ச்செல்வம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் மாதப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, ஒன்றியச் செயலாளா்கள் (வடக்கு) வேடி, (தெற்கு) வேங்கன், நகர செயலாளா் சிக்னல் ஆறுமுகம், மாரம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பூமலா் ஜீவானந்தம், உப்பாரப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சாமிநாதன், நடுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் குப்புசாமி, அம்மா பேரவை ஒன்றிய இணைச் செயலாளா் ஞானசேகரன் உள்ளிட்ட அதிமுக கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கு வந்த அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT