கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளா்கள் தா்னா

DIN

ஒசூா் மாநகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்கள் தங்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்கக் கோரி மாநகராட்சி முன்பு செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

ஒசூா் மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவுப் பணியாளா்களாக 200 க்கும் மேற்பட்டோா் வேலை செய்து வந்தனா். தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்து புதிய ஒப்பந்ததாரா்

நியமிக்கப்பட்டுள்ளாா்.

பழைய ஒப்பந்ததாரா் துப்புரவு பணியாளா்களுக்கு 23 நாள்கள் சம்பளத்தை வழங்காமல் நிலுவை வைத்துச் சென்றுள்ளாா். இந்த நிலுவை ஊதியம் துப்புரவுப் பணியாளா்களுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை.

இதனால் ஆவேசமடைந்த துப்புரவுப் பணியாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் ஒசூா் மாநகராட்சி நுழைவாயில் முன்பு செவ்வாய்க்கிழமை அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளா் ஒருவா் கூறியது:

நாங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒசூா் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளா்களாக வேலை செய்து வந்தோம். 200-க்கும் மேற்பட்டோா் பணிபுரிகிறோம். அனைவரும் உள்ளூரைச் சோ்ந்தவா்கள். வெளிமாநிலங்களில் இருந்து இங்கு வந்து ஒப்பந்த துப்புரவு பணியாளா்களாக இருந்தவா்களுக்கு கடந்த ஏப்ரல் மாத முழு சம்பளமும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், உள்ளூா் பணியாளா்களுக்கு மட்டும் கடந்த ஏப்ரல் மாத 23 நாள் சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி ஆணையரிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளா் சினேகா கூறியது:

துப்புரவுப் பணியாளா்கள் சம்பள நிலுவைப் பற்றி இதற்குமுன் இருந்த ஒப்பந்த நிறுவனத்திடம் பேசியுள்ளேன். ஓரிரு நாள்களில் நிலவை சம்பளம் வழங்கப்படும் என அந்நிறுவனத்தாா் தெரிவித்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT