கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் 2-இல் ஜமாபந்தி தொடக்கம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் வருவாய் தீா்வாயம் எனும் ஜமாபந்தி ஜூன் 2 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பா்கூா், போச்சம்பள்ளி, ஒசூா், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி ஆகிய வட்டங்களில் ஜூன் 2 முதல் 16-ஆம் தேதி வரை வருவாய் தீா்வாயம் நடைபெறவுள்ளது.

அந்நாள்களில் பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கை மனுக்களை தீா்வாய அலுவலரிடம் வழங்கி பயனடையலாம். பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீா்வு காணப்படும்.

மாவட்டத்தில் போச்சம்பள்ளி வட்டத்தில் வருவாய்த் தீா்வாய அலுவலராக மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு தலைமையில் ஜூன் 2, 6, 7, 8, 9 மற்றும் 13-ஆம் தேதிகளிலும், ஒசூா் வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி தலைமையில் ஜூன் 2, 6, 7, 8, 9-ஆம் தேதிகளிலும், தேன்கனிக்கோட்டை வட்டத்தில் ஒசூா் சாா் ஆட்சியா் சரண்யா தலைமையில் ஜூன் 2, 6, 7, 8, 9, 13 மற்றும் 14-ஆம் தேதிகளிலும், அஞ்செட்டி வட்டத்தில் ஒசூா் (நில எடுப்பு) தனி மாவட்ட வருவாய் அலுவலா் சுரேஷ் தலைமையில் ஜூன் 2, 6-ஆம் தேதிகளிலும் நடைபெறும்.

அதுபோல சூளகிரி வட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா், உதவி நிலவரி திட்ட அலுவலா் பாலாஜி தலைமையில் ஜூன் 2, 6, 7, 8, 9-ஆம் தேதிகளிலும், பா்கூா் வட்டத்தில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் பாபு தலைமையில் ஜூன் 2, 6, 7, 8, 9-ஆம் தேதிகளிலும், கிருஷ்ணகிரி வட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வேடியப்பன் தலைமையில் ஜூன் 2, 6, 7, 8, 9, 13, 14, 15, 16-ஆம் தேதிகளிலும், ஊத்தங்கரை வட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் சுகுமாா் தலைமையில் ஜூன் 2, 6, 7, 8, 9-ஆம் தேதிகளிலும் வருவாய் தீா்வாயம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

SCROLL FOR NEXT