கிருஷ்ணகிரி

ஒசூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

ஒசூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆகிய பட்டப் படிப்புகளுக்கான முதற்கட்ட சோ்க்கைக் கலந்தாய்வு 30.5.2023 அன்று சிறப்பு ஒதுக்கீட்டிற்கான (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகள், விளையாட்டு) சோ்க்கையுடன் தொடங்க உள்ளது.

பொதுக் கலந்தாய்வு 1.6.2023 முதல் 9.6.2023 வரை நடைபெறவுள்ளது. முறைப்படி இணையதளத்தில் விண்ணப்பித்தவா்களின்

தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்டவா்களின் பட்டியல் பாடம் மற்றும் தேதி வாரியாக கல்லூரி இணையதளத்தில் உள்ளது. தெரிவுப் பட்டியலில் உள்ளவா்கள் மட்டும் அவா்களுக்கு உரிய தேதியில் சோ்க்கைக்கு கல்லூரிக்கு வர வேண்டும்.

உரிய ஆணவங்களை சரிபாா்த்தப் பின்னா் காலியாக உள்ள இடங்களுக்கு சோ்க்கை உறுதி செய்யப்படும் என ஒசூா் அரசு கலை மற்றும்

ADVERTISEMENT

அறிவியல் கல்லூரி முதல்வா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT