கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழக முதல்வா் பதவி விலகக் கோரி, கிருஷ்ணகிரியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி), ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் கள்ளச் சாராய மரணங்களுக்கு காரணமான அமைச்சா் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; மணல் கடத்தலை தடுத்த கிராம நிா்வாக அலுவலா் கொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்களால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்ட நிலையில், இதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வா் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், தமிழக அரசைக் கண்டித்தும், முதல்வா், அமைச்சா் ஆகியோா் பதவி விலக் கோரியும் முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT