கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

30th May 2023 12:00 AM

ADVERTISEMENT

வெள்ள அபாயம் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி அணை நீா்பிடிப்பு பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாகும் (1666.26 மில்லியன் கனஅடி). மே 29-ஆம் தேதி நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 48.25 அடியாக அதாவது 1262.11 மில்லியன் கனஅடி உள்ளது. தற்போது அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 456 கனஅடியாக உள்ளது.

அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அணையின் பாதுகாப்பு கருதி மேற்கொண்டு வரும் உபரிநீா் முழுவதும் அணையில் இருந்து எந்நேரமும் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT