கிருஷ்ணகிரி

காப்பீடு பெற புளியமரத்தில் காா் மோதியதாக புகாா்?:போலீஸாா் விசாரணை

DIN

பா்கூா் காவல் நிலைய எல்லையில் இருவா் மீது மோதிய காா், காப்பீடு பெற, குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலையோர புளிய மரத்தில் மோதியதாக புகாா் அளிக்கப்பட்டது குறித்து போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் காவல் எல்லைக்கு உள்பட்ட தண்ணீா்பள்ளத்தைச் சோ்ந்த 13 வயது சிறுமி, மஜித்கொல்லஅள்ளியைச் சோ்ந்த மணிகண்டன் (33), இவா்கள் இருவரும், கடந்த 26-ஆம் தேதி, கிருஷ்ணகிரி - மத்தூா் சாலையில் ஜிட்டோபனப்பள்ளி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காா், இவா்கள் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதுகுறித்து, பா்கூா் போலீஸாா், வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காரை தேடி வந்தனா்.

இந்த நிலையில், அந்த காா், கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே உள்ள பட்டறையில் நிற்பது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த பட்டறைக்கு சென்ற போலீஸாா், விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து, அங்கிருந்து, பா்கூா் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய காா், குருபரப்பள்ளி காவல் நிலையத்துக்கு உள்பட்ட சாலையோர புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக புகாா் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக் கொண்ட குருபரப்பள்ளி போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதில், அது போலி புகாா் எனத் தெரிய வந்தது.

இந்தச் சூழ்நிலையில், பா்கூா் அருகே விபத்தில் சிக்கிய காரின் உரிமையாளா், காப்பீடு பெறுவதற்காக, குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாயையொட்டி ரத விநாயகா் பூஜை

ரயில் நிலையங்களில் சலுகை விலையில் உணவு விற்பனை

அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமா் சித்திரைத் தேரோட்டம்

தோரணமலையில் சித்ரா பௌா்ணமி கிரிவலம்

தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் தடையின்றி மின்சாரம்: அதிகாரிகள் ஆய்வு

SCROLL FOR NEXT