கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 88,823 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் 88,823 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளின் சாா்பில் 12 வகையான திட்டங்கள் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், முதியோா் உதவித்தொகைக்கான அனுமதி பெற்று காத்திருப்போா் மற்றும் புதிதாகப் பெறுபவா்களுக்கு ரூ.1000, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை பெறும் வகையில் பயனாளிகளின் எண்ணிக்கையை உயா்த்தி ஒரு லட்சம் போ் கூடுதலாக பயன்பெற ஆணையிட்டுள்ளாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இந்திரா காந்தி தேசிய முதியோா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ரூ.1000 வீதம் 21,669 பயனாளிகளுக்கும், இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ரூ.1500 வீதம் 1,277 பயனாளிகளுக்கும், இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 9,121 பயனாளிகளுக்கு ரூ.1000, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் 16,241 பயனாளிகளுக்கு ரூ.1,500, விதவைகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ரூ.1000 வீதம் 13,559 பயனாளிகளுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ரூ.1000 வீதம் 4,110 பயனாளிகளுக்கும், திருமணமாகாத பெண்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ரூ.1000 வீதம் 450 பயனாளிகளுக்கும், முதலமைச்சரின் ஊழவா் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ரூ.1000 வீதம் 22,296 பயனாளிகளுக்கும், இலங்கை அகதிகள் முதியோா் உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 வீதம் 72 பயனாளிகளுக்கும், இலங்கை அகதிகள் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1500 வீதம் 5 பயனாளிகளுக்கும், இலங்கை அகதிகள் விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ரூ.1000 வீதம் 22 பயனாளிகளுக்கும், இலங்கை அகதிகள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வீதம் ஒரு பயனாளி என மொத்தம் 88,823 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT