கிருஷ்ணகிரி

ஒசூா் மீன் மாா்க்கெட்டில் மீன்வளத் துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மீன் விற்பனை மையங்களில் ரசாயனம் கலந்த மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வள உதவி இயக்குனா் ரத்தினம் உத்தரவின் பேரில் ஒசூா் மீன்வளத்துறை சாா் ஆய்வாளா் முருகேசன் தலைமையில் அதிகாரிகள் ஒசூா்- பெங்களூா் வெளிவட்டச் சாலை உள்ளிட்ட பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை செய்யும் கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

சுமாா் 20 கடைகளை ஆய்வு செய்த அதிகாரிகள் அப்போது அங்கு செயல்பட்டு வந்த இரண்டு மீன் விற்பனை மையங்களில் சுமாா் 15 கிலோ எடையுள்ள கெட்டுப்போன இறால் மற்றும் அயிலை மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பறிமுதல் செய்து அப்புறப்படுத்திய அதிகாரிகள், அதை குழி தோண்டிப் புதைத்தனா்.

மேலும் மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே மீன் விற்பனை மைய உரிமையாளா்கள் மீன்களை கொள்முதல் செய்யும்போது அவற்றில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ளனவா? என்பதை ஆய்வு செய்த பின்னரே வாங்கி விற்பனை செய்ய வேண்டும்.

மேலும் தொடா்ந்து இது போன்று கெட்டுப்போன மீன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீன் விற்பனைக்கான முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்றும் மீன் விற்பனையாளா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

கிருஷ்ணா தண்ணீரை நிறுத்தியது ஆந்திரம்: மிச்ச தண்ணீர்?

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

SCROLL FOR NEXT