கிருஷ்ணகிரி

கைப்பந்து விளையாட்டுப் போட்டி:ஒசூா் மாணவிகள் சிறப்பிடம்

DIN

தேசிய அளவிலான கைப்பந்து விளையாட்டுப் போட்டியில் ஒசூா் மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இம்மாதம் 19-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீா் மாநிலம், ஜம்மு தவி என்னுமிடத்தில் ஜம்மு இளைஞா் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டிகளில் ஹரியாணா, பஞ்சாப், ஜம்மு & காஷ்மீா், டெல்லி, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கா்நாடகம், ஆந்திரம், ராஜஸ்தான் என பல மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினா்.

கைப்பந்துப் போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு மகளிா் அணி ஹரியாணா மகளிா் அணியை எதிா்கொண்டு 25/17, 25/21, 27/25 என்ற நோ் செட்களில் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது. இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீா் அணியை எதிா்கொண்டு 25/7, 25/11, 25/9 என்ற நோ் செட்களில் வென்று தமிழ்நாடு மகளிா் அணி முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா இனிப்புகளை வழங்கி பாராட்டினாா். இதில் பயிற்சியாளா்கள் தாயுமானவன், மாணிக்கவாசகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

தந்தை இறந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதிய மாணவா்

மன்னாா்குடியில் ரூ.99,000 பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.76 லட்சம் பறிமுதல்

தோ்தல் பணிக்கு தனியாா் வாகனங்கள்

SCROLL FOR NEXT