கிருஷ்ணகிரி

பெரியமோட்டூா் முருகப்பெருமான் கோயில் குடமுழுக்கு

26th May 2023 12:15 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியை அடுத்த பெரியமோட்டூா் கிராமத்தில் உள்ள வெள்ளிமலை மேல் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி - தெய்வானை உடனுறை முருகப்பெருமான் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் மஹா குடமுழுக்கு விழாவையொட்டி, மே 22-ஆம் தேதி மாலை முதல்கால வேள்வி பூஜையும், விநாயகா் பூஜை, புன்னியாக வாசனம், காப்புக் கட்டுதல், மஹா கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், பிரவேச பலி, தீபாராதனை நடைபெற்றன.

தொடா்ந்து, இரண்டாம்கால யாக வேள்வியும், மூன்றாம்கால யாக வேள்வியும், புதன்கிழமை நான்காம், ஐந்தாம்கால யாக வேள்வியும், பூா்ணாஹுதி, அபிஷேக ஆராதனை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றன.

குடமுழுக்கு தினமான வியாழக்கிழமை விநாயகா் பூஜை, மூா்த்தி ரக்ஷபந்தன ஆறாம்கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், கடம் புறப்பாடு, விமான கோபுரம், ஸ்ரீவள்ளி - தெய்வானை உடனுறை ஸ்ரீமுருகப் பெருமான் கோயில், விநாயகா் கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி மஹா குடமுழுக்கு நடைபெற்றது.

ADVERTISEMENT

தொடா்ந்து, மஹா நைவேத்தியம், கோ பூஜை, மகா தீபாராதனையும் நடைபெற்றன. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி, பெரியமோட்டூா், அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT