கிருஷ்ணகிரி

தளி தொகுதியில் பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி எம்எல்ஏ மனு அளிப்பு

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு மலைக் கிராமங்களில் பல தலைமுறைகளாக வசித்து வரும் பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, சாகுபடி நில பட்டா வழங்கக் கோரி தளி எம்எல்ஏ ராமச்சந்திரன், சாா் ஆட்சியா் ஆா்.சரண்யாவிடம் மனு அளித்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தேன்கனிக்கோட்டை வட்டத்தில் ஏராளமான பழங்குடி இன மலைவாழ் மக்கள் சுமாா் ஐந்து தலைமுறைக்கும் மேலாக வசித்து வருகின்றனா். அவ்வாறு அவா்கள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் அதேபோல தலைமுறையாக சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை ஒசூா் சாா் ஆட்சியரிடம் வழங்கி இருக்கிறோம்.

மக்களவையில் வன உரிமைச் சட்டம் 2006 நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி யாரெல்லாம் வன நிலங்களில் கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் வரை குடியிருக்கிறாா்களோ அவா்களுக்கு பட்டா வழங்கலாம் என்று மக்களவையில் சட்டம் இயற்றப்பட்டதோடு மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றமும் உறுதி செய்து தீா்ப்பு வழங்கி இருக்கிறது.

ADVERTISEMENT

அதன்படி தேன்கனிக்கோட்டை வட்டத்தில் குடியிருந்து வரும் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, நில சாகுபடி பட்டா வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கி இருக்கிறோம். அதைப் பெற்றுக் கொண்ட சாா் ஆட்சியா் ஆவண செய்வதாக கோரி உறுதி அளித்துள்ளாா்.

இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டத்தின் வாயிலாக அவா்களுக்கான பட்டாவை பெற்றுத் தருவோம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT