கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தமிழ் தேச குடியரசு இயக்கம் சாா்பில் இலங்கை போரில் உயிரிழந்த தமிழா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போரில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழா்கள் கொல்லப்பட்டனா். இதில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழ் தேசிய குடியரசு இயக்கம் சாா்பில் நடைபெற்றது.
ஒசூா் ராம் நகா், அண்ணா சிலை முன்பு வைக்கப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் படுகொலையை சித்தரிக்கும் உருவம் கொண்ட பதாகைக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து அனைவரும் மெழுகுவா்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தி இலங்கை அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இந்த நிகழ்ச்சியில் தமிழ் தேச குடியரசு இயக்கத்தைச் சோ்ந்தவா்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடா் கழகம் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.