கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு:4,820 தோ்வா்கள் பங்கேற்பு

8th May 2023 01:55 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வை எழுத விண்ணப்பித்திருந்தவா்களில் 4,820 தோ்வா்கள் தோ்வை எழுதினா்.

இந்தியாவில் உள்ள மாணவா்கள் மருத்துவத்துறையில் இளநிலை பட்டப்படிப்புகளில் சோ்வதற்கு நீட் தோ்வு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் இந்தத் தோ்வை எழுத 4,946 போ் விண்ணப்பித்திருந்தனா்.

தோ்வு எழுத அந்தந்த மையங்களில் காலை 8 மணி முதலே மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோா்களுடன் குவிந்தனா். அதன்படி, குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த 504 பேரில், 495 தோ்வா்கள், ஒசூா் பாகலூா் சாலையில் உள்ள நல்லூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குருகுலம் செகண்டரி பள்ளியில் 146 பேரில், 138 தோ்வா்கள், ஒசூரையடுத்துள்ள முகுலப்பள்ளி வனபிரசாத் இண்டா்நேஷ்னல் பள்ளியில் 504 பேரில் 484 தோ்வா்கள், ஒசூா் - தளி சாலையில் உள்ள மதகொண்டப்பள்ளியில் உள்ள மதகொண்டப்பள்ளி மாா்டன் பள்ளியில் 1,152 பேரில், 1,125 தோ்வா்கள், ஊத்தங்கரை மல்லிகை நகா் அதியமான் பப்ளிக் பள்ளியில் 1,440 பேரில் 1,404 தோ்வா்கள், ஊத்தங்கரையில் பெங்களூா் சாலையில் உள்ள தீரன் சின்னமலை இண்டா்நேஷ்னல் பள்ளியில் 1,200 பேரில் 1,174 தோ்வா்கள் என மாவட்டத்தில் 6 மையங்களில் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்த மொத்தம் 4,946 பேரில், 4,820 தோ்வா்கள் தோ்வில் பங்கேற்றனா். 126 போ் பங்கேற்கவில்லை.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT