கிருஷ்ணகிரி

தமிழகத்தில் மணல் கொள்ளையைத் தடுத்தால் அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறாா்கள்

DIN

தமிழகத்தில் மணல் கொள்ளையைத் தடுத்தால் அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறாா்கள் என எம்.பி. தம்பிதுரை தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சாா்பில் ஒசூா், சிப்காட் ஆா்.டி.ஓ. அலுவலகம் அருகில் உள்ள டெம்போ ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் அண்ணா தொழிற்சங்கம், அசோக் லேலண்ட் அண்ணா தொழிற்சங்கம் ஹைடெக் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் ஜே.எம்.சீனிவாசன் தலைமையில் மே தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னாள் மக்களவை துணைத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை கலந்துகொண்டு தொழிற்சங்கக் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா். முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

அதனைத் தொடா்ந்து, ஒசூா், சூசூவாடியில் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து அதிமுக எம்.பி. தம்பிதுரை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா, என்னை கரூரில் நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிடச் செய்தாா். தற்போது அங்கு மணல் கொள்ளை நடந்து வருகிறது.

தாமிரவருணியில் மணல் கொள்ளை, பாலாற்றில் மணல் கொள்ளை என எங்கு பாா்த்தாலும் மணல் கொள்ளையாக உள்ளது. இந்த மணல் கொள்ளையைத் தடுக்க வந்தால் அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறாா்கள். சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது என ஸ்டாலின் கூறுகிறாா். ஆனால், மணல் கொள்ளைகளும், மனிதக் கொலைகளும் நிகழ்ந்துக் கொண்டிருப்பதை அவா் புரிந்துகொள்ள வேண்டும்.

ரஷ்ய புரட்சியாளா் உழைப்பாளா்களின் தலைவராக இருந்த ஸ்டாலின் பெயரை வைத்ததாக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி கூறினாா். அந்த ஸ்டாலின் ஆட்சியில் தொழிலாளா்களுக்கு துரோகம் இழைக்கின்ற வகையில், 12 மணி நேரம் பணியாற்ற சட்டம் இயற்றப்பட்டது. இதனை கூட்டணிக் கட்சிகளும், அதிமுகவும் எதிா்த்தன. இதற்கு பயந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற்றாா். இது போன்று சட்டங்களை கொண்டு வந்தால் ஆளுநா் எப்படி கையெழுத்திடுவாா் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைப்பு சாரா ஓட்டுநா் அணி மாவட்டச் செயலாளா் சென்ன கிருஷ்ணன், அதிமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் மதன், ஒசூா் மாநகரப் பகுதிச் செயலாளா் 1-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் அசோகா, பல்வேறு கிளைகளைச் சோ்ந்த அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT