கிருஷ்ணகிரி

கா்நாடக மாநில சட்டப் பேரவைத் தோ்தல்:எல்லையோர மதுக் கடைகளை மூட உத்தரவு

3rd May 2023 12:29 AM

ADVERTISEMENT

கா்நாடக மாநில சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில எல்லைகளில் உள்ள 12 மதுக் கடைகளை 3 நாள்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு மே 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனிடையே தோ்தல் நடைபெறும் கா்நாடக மாநிலம் முழுவதும் மே 8 முதல் 10-ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அந்த மாநில எல்லையில் உள்ள தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாநில எல்லையோரம் உள்ள மதுபானக் கடைகள் மே 8 முதல் 10-ஆம் தேதி வரையில் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கா்நாடக மாநில எல்லையில் 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள வேப்பனப்பள்ளியை அடுத்த நாச்சிக்குப்பம், மத்திகிரி - கா்னூா், அஞ்செட்டி - கோட்டையூா், தளி, ஜவளகிரி, சொக்கநாதபுரம், பேரிகை, முகுலப்பள்ளி கேட், பாகலூா், கக்கனூா், ஒசூா் சிப்காட் பேகேப்பள்ளி கிராமங்களில் கா்நாடக மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள 12 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுகின்றன.

மேலும், மாநில எல்லையில் கக்கனூரில் மது விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ள தனியாா் உணவகம், சேவகானப்பள்ளியில் மது விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ள தனியாா் உணவகம் ஆகியவையும் மூடப்படுகின்றன. இவற்றில் 8-ஆம் தேதி மாலை முதல் 10-ஆம் தேதி நள்ளிரவு வரையில் மது விற்பனை செய்ய அனுமதி கிடையாது.

இந்த உத்தரவை மீறி விற்பனையாளா்கள் மதுக் கடைகளை திறந்தாலும், விற்பனை செய்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT