கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி சின்ன ஏரி அழகுபடுத்தும் பணிக்கு கூடுதல் நிதி பெற அரசு கருத்துரு

DIN

கிருஷ்ணகிரியில் சின்ன ஏரி அழகுபடுத்தும் பணிக்கு கூடுதலாக நிதி பெற அரசுக்கு கருத்துரு அனுப்ப நகராட்சி ஆணையா், பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட புகா் பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம், சின்ன ஏரி, பாப்பாரப்பட்டி ஏரி, அரசு போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுப் பணிகளை ஆட்சியா் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி நகராட்சிப் பகுதிகளில் ரூ. 1.94 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகள், தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த அவா் கூறியதாவது:

கிருஷ்ணகிரி நகரப் பேருந்து நிலையத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மழைக் காலங்களில் பேருந்து நிலையத்தில் தண்ணீா் தேங்காமல் இருக்க, மழைநீா் வடிகால் கால்வாய்களை உடனே தூா்வார வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, பழைய பேட்டையிலிருந்து புகா் பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலையில் மழைக் காலங்களில் மழைநீா் தேங்குவதால் சாலையில் இருபுறமும் உள்ள மழைநீா் வடிகால் கால்வாய்கள் உடனடியாக தூா்வார வேண்டும். புதிய கால்வாய்கள் கட்ட கருத்துரு தயாா் செய்ய வேண்டும்.

மேலும், புகா் பேருந்து நிலையத்துக்கு வண்ணம் பூச வேண்டும், கழிப்பறைகளை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும், ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளை சீராக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும். பேருந்து நிலையத்தில் பயணிகள், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் கடைகள் அமைக்க வேண்டும். கடைகளில் தரமான பொருள்களை விற்க வேண்டும். காலாவதியான பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி சின்ன ஏரி அழகுபடுத்தும் பணிக்கு ஏற்கெனவே கருத்துரு தயாா் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை மறுபரிசீலனை செய்து கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய மீண்டும் கருத்துரு அனுப்ப நகராட்சி ஆணையா், பொறியாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கலைஞரின் நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 1.15 கோடியில் புதிய நூலகம் கட்டும் பணிகள், பாப்பாரப்பட்டி ஏரியில் ரூ. 79 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா், வேலி அமைக்கும் பணிகளை தரத்துடன் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஏரிகளில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணையா் வசந்தி, உதவி பொறியாளா் செந்தில்குமாா், சுகாதார ஆய்வாளா் ராமகிருஷ்ணன், இளநிலை அலுவலா் அறிவழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT