கிருஷ்ணகிரி

ஒசூரில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை

DIN

ஒசூா் செயின்ட் ஜோசப் மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சாா் ஆட்சியா் ஆா்.சரண்யா பேசியதாவது:

உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழா் பண்பாடு மிகவும் தொன்மையானது. தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும்

காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலையும் வளரும் தலைமுறையினா் முழுமையாகத்

தெரிந்துக்கொள்ளும் வகையில் பண்பாட்டின் முக்கியக் கூறுகளான கலை,

இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை அவா்களுக்கு உணா்த்துவது சமூகத்தின் கடமை. இதன்மூலம் அவா்கள் உணா்ந்ததை அடுத்து வரும் சந்ததியனருக்குக் கொண்டுசெல்ல முடியும். இதனால் விழிப்புணா்வு உள்ள சமூகத்தை உருவாக்க முடியும். நமது பண்பாட்டின் உயா்ந்த விழுமியங்களும் தொடா்ந்து பல தலைமுறைகளுக்கு நீடித்து நிலைத்திருக்கும். நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு குறிப்பாக கல்லூரி மாணவா்களுக்கு உணா்த்துவது என்பது ஆரோக்கியமான எதிா்காலச் சமூகத்தின் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பங்காகும். அதனடிப்படையில் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் தலா 1000 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்த உத்தரவிட்டுள்ளாா் என்றாா்.

இந்த நிகழ்ச்சி ஒசூா் செயின்ட் ஜோசப் மகளிா் கலை, அறிவியல் கல்லூரில் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி, தளி அரசு கலை, அறிவியல் கல்லூரி, மூக்காண்டப்பள்ளி

செயின்ட் ஜோசப் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, ஒசூா் எம்.ஜி.ஆா். கலை, அறிவியல் கல்லூரி, போலுப்பள்ளி அறிஞா் அண்ணா கலை, அறிவியல் கல்லூரி, காரப்பட்டு யூனிக் கலை, அறிவியல் கல்லூரி, கோனேரிப்பள்ளி பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி, ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி ஆகிய 8 கல்லூரிகளைச் சோ்ந்த 1000 மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.

இந் நிகழ்ச்சியில் எழுத்தாளா் ஆண்டாள் பிரிதா்ஷினி ‘சமூகமும், கல்லூரிக்கு வெளியே கல்வி’ என்ற தலைப்பிலும், ஊடகவியலாளா் சமஸ் ‘தமிழ் வரலாறு என்ன சொல்கிறது’ என்ற தலைப்பிலும் பேசினா்.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் மாவட்ட நூலகத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கைவினைப் பொருள்கள், சிறுதானிய உணவு அரங்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த

அரங்கம், மாவட்ட தொழில்மையம், நிதிசாா் கல்வி மற்றும் கடன் ஆலோசனை மையம் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி, அரங்குகளை சாா் ஆட்சியா் ஆா்.சரண்யா, மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலா் சுகுமாா், மாவட்ட தொழில் மையம் மேலாளா் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட நூலக அலுவலா் தனலட்சுமி, முன்னோடி வங்கி மேலாளா் மகேந்திரன்,

வட்டாட்சியா் சுப்பிரமணி, தனி வட்டாட்சியா்கள் பெருமாள் ரமேஷ், செயின்ட் ஜோசப் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ஹெலன்,

உதவி பேராசிரியா் (தமிழ்த் துறை) எழிலரசி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT