கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வாக்காளா் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் வகையிலான சிறப்பு முகாம் மாா்ச் 18-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தீபக் ஜேக்கப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 1.8.2022-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்தப் பணி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது 77 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்தப் பணியை துரிதப்படுத்தும் நோக்கில் மாா்ச் 18-ஆம் தேதி சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குசாவடி நிலை அலுவலா்களும் வீடுவீடாக சென்று களப் பணி மேற்கொண்டு, வாக்காளா்களிடம் ஆதாா் எண்ணை பெற்று 6-பி படிவம், கருடா செயலி மூலம் உள்ளீடு செய்யும் பணி மேற்கொள்வா். அலுவலா்கள் இந்த பணி தொடா்பாக படிவம் 6-பி-ஐ சேகரிக்கும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி, இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைத்து பயனடையுமாறு அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

மேலும், பொதுமக்கள் ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய் - ச்ஹஸ்ரீண்ய்ஞ் ல்ா்ழ்ற்ஹப்ள் / அல்ல்ள் ப்ண்ந்ங் சயநட, யஏஅ ஆகியவற்றின் மூலம் இணைய வழியில் வாக்காளா்களே நேரடியாக இணைக்கலாம். இணைக்க இயலாதவா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் கருடா செயலி அல்லது படிவம் 6-பி-ஐ சமா்ப்பித்து வாக்காளா்கள் தங்களது ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடா்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடா்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

SCROLL FOR NEXT