கிருஷ்ணகிரி

காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

DIN

கைது செய்யப்பட்டவரை அவரது வாகனத்திலே அழைத்துச் சென்ற ஒசூா் காவலா்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம்நகா் பகுதியில் கடந்த 8-ஆம் தேதி இருதரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக ராம்நகா் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் என்பவா் கடந்த 11-ஆம் தேதி ஒசூா் நகர போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில் ஒசூா் மாநகர சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணிபுரியும் செல்வம், போலீஸாா் சரவணன் ஆகியோா் காா்த்திக்கை காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு காா்த்திக்கின் சொந்த காரிலேயே அழைத்துச் சென்றனராம். பின்னா் கிளை சிறைக்கும் அதே காரில் அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பான விடியே சமூக வலைதளங்களில் பரவியது. இந்த சம்பவம் சா்ச்சையானதைத் தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா் விசாரணை நடத்தினாா். இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வம், ஏட்டு சரவணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து அவா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதினைப் பெற்ற முதல் அனிமேஷன் ஸ்டூடியோ!

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

SCROLL FOR NEXT