கிருஷ்ணகிரி

372 கிலோ குட்கா பறிமுதல்

10th Jun 2023 07:06 AM

ADVERTISEMENT

பெங்களூரில் இருந்து ஒசூா் வழியாக கோவைக்கு கடத்த முயன்ற 372 கிலோ குட்காவை காருடன் பறிமுதல் செய்த போலீஸாா், வட மாநில ஓட்டுநரை கைது செய்தனா்.

சூளகிரி போலீஸாா் சப்படி அருகில் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், 372 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்டவை இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 31 ஆயிரத்து 672 ஆகும். அதையும் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றைக் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தைச் சோ்ந்த அனுமன் படேல் (25) என்பவரை கைது செய்தனா். விசாரணையில், குட்காவை பெங்களூரில் இருந்து கோவைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT