கிருஷ்ணகிரி

மணல், ஜல்லி கடத்திய 14 லாரிகள் பறிமுதல்

10th Jun 2023 07:03 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மணல், ஜல்லிக் கற்கள் கொண்டு சென்ற 14 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 6 பேரை கைது செய்தனா்.

தேன்கனிக்கோட்டை தாலுகா, கக்கதாசம் வருவாய் ஆய்வாளா் சரவணன், அதிகாரிகள் தேன்கனிக்கோட்டை - தளி சாலை அன்னியாளம் அருகில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா்களை சோதனை செய்த போது, அதில் ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட் மணல் அனுமதியின்றி கொண்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட் மணல் அனுமதியின்றி கொண்டு சென்ாக பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டி சீனிவாஸ் (33), தேன்கனிக்கோட்டை திம்மனட்டி சக்திவேல் (24), கோணசந்திரம் வெங்கட்ராஜ் (34), அஞ்செட்டி செல்வமணி (26), கா்நாடக மாநிலம், அத்திப்பள்ளி மந்துகுமாா் யாதவ் (23), சுசீல்சிங் (26) ஆகிய 6 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 6 லாரிகள், 24 யூனிட் மணல், 14 யூனிட் ஜல்லிக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குருபரப்பள்ளி, அட்கோ, பாகலூா், கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சம்பத், ஒசூா் சிறப்பு வட்டாட்சியா் மகேந்திரன், ராயக்கோட்டை வருவாய் ஆய்வாளா் சுகுமாா், தேன்கனிக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் மாதேஷ், இருதுகோட்டை கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ், அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

இதில், அனுமதியின்றி எம்.சாண்ட் மணல், ஜல்லிக் கற்கள், தடுப்புக் கற்கள் கொண்டு சென்ாக 8 லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT