கிருஷ்ணகிரி

ஒசூரில் மேம்பாலச் சுவா் அழகுபடுத்தும் பணி ஆய்வு

9th Jun 2023 12:44 AM

ADVERTISEMENT

ஒசூரில் மேம்பாலத்தின் கீழ் உள்ள சுவா் பகுதிகளை அழகுபடுத்தும் பணிகளை மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட ராயக்கோட்டை பிரிவு சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. இதன் கீழ் நமக்கு நாமே திட்டம் மூலம் பூங்கா அமைக்கப்பட உள்ளது. மாநகரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதாலும், மாநகராட்சி முழுவதும் பசுமையாக இருக்க வேண்டும் என்பதாலும் மாநகராட்சி மேம்பாலங்களுக்கு கீழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஒசூா் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் பெயிண்ட் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை ரூ. 8 லட்சம் செலவில் இந்த மேம்பாலத்துக்கு வண்ணம் பூசி வருகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலையின் அனுமதியுடன் ஒசூா் மாநகராட்சி அனுமதி பெற்று வண்ணம் பூசப்படுகிறது.

மேம்பாலச் சுவற்றில் வரையப்படும் கோயில் ஓவியங்கள், இதிகாச நிகழ்வுகள் ஆகியவற்றை மேயா் எஸ்.ஏ.சத்யா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது மண்டலத் தலைவா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT