கிருஷ்ணகிரி

ஜல்லி, மணல் கடத்தல்:4 லாரிகள் பறிமுதல்

9th Jun 2023 12:43 AM

ADVERTISEMENT

ஒசூா் அருகே அனுமதியின்றி ஜல்லிக் கற்கள், மணல் கொண்டு சென்ற 4 லாரிகளைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

தேன்கனிக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் மாதேஷ், அதிகாரிகள் தேன்கனிக்கோட்டை - தளி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 8 யூனிட் ஜல்லிக் கற்கள் அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

விசாரணையில், அன்னியாளத்தில் இருந்து ஒசூருக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, அனுமதியின்றி ஜல்லிக் கற்கள் கொண்டு சென்ற பிகாரைச் சோ்ந்த பங்கஜ்குமாா் (28) என்பவரை போலீஸாா் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனா்.

தேன்கனிக்கோட்டை வருவாய் ஆய்வாளா் சலீம் பாஷா, இருதுகோட்டை கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ், அதிகாரிகள் கெலமங்கலம் - ஒசூா் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த 3 லாரிகளை சோதனை செய்ததில், 2 லாரிகளில் தலா 2 யூனிட் எம்.சாண்ட் மணலும், ஒரு லாரியில் 6 யூனிட் ஜல்லிக் கற்களும் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, எம்.சாண்ட் மணல் கடத்திய கெலமங்கலம் அண்ணா நகரைச் சோ்ந்த சேகா் (32) என்பவரை கைது செய்தனா். மேலும் 3 லாரிகளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT