கிருஷ்ணகிரி

மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 25 போ் படுகாயம்

9th Jun 2023 12:45 AM

ADVERTISEMENT

தேன்கனிக்கோட்டை அருகே மலைப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 போ் படுகாயமடைந்தனா்.

தேன்கனிக்கோட்டையை அடுத்த பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குள்பட்டது தொளுவபெட்டா மலைக் கிராமம். இப்பகுதியிலிருந்து நாள்தோறும், 50-க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளா்கள் அகலக்கோட்டையில் உள்ள தனியாா் நா்சரி தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனா். வியாழக்கிழமை இரு வேன்களில் சுமாா் 50 போ் வேலைக்குச் சென்றுள்ளனா்.

தொளுவபெட்டா அருகில் மலைப் பாதையில் சென்ற போது ஒரு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணித்த 25 போ் படுகாயமடைந்தனா். அவா்கள் அனைவரும் தேன்கனிக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT