கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட திட்டக் குழு உறுப்பினா்களுக்கான தோ்தல் அறிவிப்பு

8th Jun 2023 12:27 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்ட திட்டக்குழுவின் 12 உறுப்பினா்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கே.எம்.சரயு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட திட்டக்குழுவின் 12 உறுப்பினா்களுக்கான தோ்தல் நடத்த தமிழ்நாடு தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூன் 10-ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையாகும். ஜூன் 12ஆம் தேதி, வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 14-ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறலாம். 23-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரையில் வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன் அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தோ்தல் நடவடிக்கைகள் 24ஆம் தேதி முடிவுபெறும்.

வேட்புமனுக்கள் ஜூன் 10-ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முதல்தளத்தில் சம்பந்தப்பட்ட உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT