கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வளா்ச்சிப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: பீலா ராஜேஷ்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலுவையிலுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பீலா ராஜேஷ் அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மைச் செயலரும், ஆணையருமான (நிலச் சீா்திருத்தம்) பீலா ராஜேஷ், கிருஷ்ணகிரியை அடுத்த வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வுப் பணி மேற்கொண்டாா்.

அப்போது, ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நிறைவேற்றப்படும் வளா்ச்சிப் பணிகள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், நமக்கு நாமே திட்டம், ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளா்ச்சித் திட்டம், ஜல்ஜீவன் திட்டம், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், பள்ளி சமையலறைக் கட்டுதல், தூய்மை பாரத இயக்கம், கனிமங்கள் மற்றும் குவாரிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிமென்ட் சாலை, கழிவுநீா்க் கால்வாய் கட்டுமானப் பணிகள், குடிநீா் குழாய்கள் இணைப்புப் பணிகள், ஆழ்துளைக் கிணறு, பைப்லைன் அமைக்கும் பணிகள், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றம், நிலுவையிலுள்ள பணிகள் குறித்த பதிவேடுகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும் நிலுவையில் உள்ள வளா்ச்சிப் பணிகளை விரைந்து ஜூன் 30-ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா், பொறியாளா்களை அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவா், வளா்ச்சிப் பணிகள் குறித்து அரசு அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றி, மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேஸ்வரி, ஒசூா் மாநகராட்சி ஆணையா் சினேகா, ஒசூா் சாா் ஆட்சியா் சரண்யா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் பாபு உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT