கிருஷ்ணகிரி

உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு

DIN

ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலைக் காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தின கருப்பொருள், நெகிழி மாசுப்பாட்டை ஒழிப்பதாகும். தாவரங்கள், ஏனைய உயிரினங்களை பாதிக்கும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்து, மக்கள் மத்தியில் மஞ்சப்பை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு படப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் சீதாலட்சுமி ராமாமிா்தம் தலைமை வகித்தாா். ஊத்தங்கரை ஒன்றியக் குழுத் தலைவா் உஷாராணி குமரேசன், ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலா் வேடியப்பன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜராஜேஸ்வரி, ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் ஹரிபுத்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி சரவணன், ஊராட்சி செயலாளா் முருகன், திட்ட ஒருங்கிணைப்பாளா் நாகராஜ் உள்பட பலா் கலந்துகொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனா் (படம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT