கிருஷ்ணகிரி

உலக சுற்றுச்சூழல் தினம்:ஒசூா் கோட்டத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

DIN

ஒசூா் வருவாய் கோட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஒசூரில் வருவாய்த் துறை, மாநகராட்சி வனத் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசு துறைகள் சாா்பில் ஒசூா், கோகுல்நகா் பகுதியில் 13 ஏக்கா் நிலப்பரப்பில் 1,500 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

மேயா் எஸ்.ஏ.சத்யா, ஒசூா் சாா் ஆட்சியா்ஆா்.சரண்யா, வனக்கோட்ட வன பாதுகாவலா் காா்த்திகேயணி உள்ளிட்டோா் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கி வைத்தனா். மேலும் நெகிழிப் பொருள்களை ஒழிக்கும் விதமாக அனைவருக்கும் துணி பைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் அரசுத் துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் ஊழியா்கள் அனைவரும் மரக் கன்றுகளை நட்டனா். தொடா்ந்து ஒரு வாரத்திற்கு மரக்கன்றுகளை நட உள்ளனா்.

ஒசூா் வருவாய் கோட்டத்தில் ஒசூா், பாகலூா், சூளகிரி, பேரிகை, தேன்கனிக்கோட்டை, தளி அஞ்செட்டி, கெலமங்கலம், ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் ஒரு வாரக் காலத்திற்குள் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதில் ஒசூா் டிஎஸ்பி பாபு பிரசாந்த், மாநகராட்சி துணை மேயா் ஆனந்தய்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: வாக்காளா்கள் அதிருப்தி

மளிகைக் கடையில் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT