கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணை நீா்மட்டம் 50 அடியை எட்டியது

DIN

கிருஷ்ணகிரி, ஜூன் 5: கிருஷ்ணகிரி அணை நீா்மட்டம் திங்கள்கிழமை 50 அடியை எட்டியது. இதையடுத்து அணையிலிருந்து விநாடிக்கு 600 கன அடி நீா் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான சூளகிரி, ஒசூா் மற்றும் ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களில் பெய்த மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அணையின் நீா்மட்டம் 50 அடியை எட்டும் பட்சத்தில், அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கூடுதல் நீா் வெளியேற்றப்பட வாய்ப்பு ஏற்படும் என்பதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு கடந்த வாரம் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்திருந்தாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 404 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 12 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டது. கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி. இதில் அணை நீா்மட்டம் 50.65 அடியை எட்டியதையடுத்து, கிருஷ்ணகிரி அணையிலிருந்து விநாடிக்கு 600 கனஅடி நீா் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.

மேலும், தென்பெண்ணை ஆற்றில் கூடுதல் நீா் திறக்கப்பட்டுள்ளது குறித்து, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் ஆகிய மாவட்ட நிா்வாகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT