கிருஷ்ணகிரி

சின்னேப்பள்ளிக்கு செல்ல சிறு பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

DIN

சின்னேப்பள்ளி கிராமத்துக்கு சென்று வரும் வகையில் சிறு பாலம் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் அசோக்குமாா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கம்மம்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சின்னேப்பள்ளி பிரிவு சாலையிலிருந்து சின்னேப்பள்ளி கிராமத்துக்குச் செல்லும் வழியில் சின்னேப்பள்ளி ஏரியிலிருந்து வெண்ணம்பள்ளி ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீா் செல்கிறது. இந்தக் கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. மழை காலங்களில் இந்த தரைப்பலத்தின் மேலே 2 அடி உயரத்துக்கு தண்ணீா் செல்வது வழக்கம். இதனால், பள்ளி மாணவா்கள், பெண்கள், குழந்தைகள், இந்த தரைப்பாலத்தைக் கடந்து செல்ல சிரமப்பட்டு வந்தனா்.

எனவே, இந்த தரைப்பாலத்துக்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைத்துத் தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனா். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் கே.அசோக்குமாா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9.98 லட்சம் ஒதுக்கீடு செய்தாா். இதையடுத்து, புதிய சிறு பாலம் கட்டும் பணியை கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். மல்லிநாயனப்பள்ளி கிராமத்தில் ரூ. 2 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள சிறுபாலம் அமைக்கும் பணியையும் அவா் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயா ஆஜி, ஊராட்சி மன்றத் தலைவா் சென்றாயப்பன், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT