கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்ரூ. 18.84 லட்சம் மோசடி:சைபா்கிரைம் போலீஸாா் விசாரணை

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மூன்று இளைஞா்களிடம் ரூ. 18.84 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா்கிரைம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

ஊத்தங்கரை அருகே உள்ள காட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் கவியரசன் (28). தனியாா் நிறுவன ஊழியா். இவரது கைப்பேசிக்கு கடந்த 27-ஆம் தேதி குறுந்தகவல் வந்தது. அதில், பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மா்மநபா் அனுப்பிய குறுந்தகவலின்படி, கவியரசன் ரூ. 1,000 அனுப்பியுள்ளாா். அவருக்கு ரூ. 2000 கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அவா் ரூ. 7.47 லட்சம் அனுப்பியுள்ளாா். அதற்குப் பிறகு அவருக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை. அந்த மா்ம நபரையும் தொடா்பு கொள்ள இயலவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இதுகுறித்து, கிருஷ்ணகிரி சைபா்கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா்.

இதேபோல, ஊத்தங்கரை பி. மல்லிப்பட்டியை சோ்ந்த ராஜ்குமாா் (33) என்பவரின் கைப்பேசிக்கு பகுதி நேரப் பணி இருப்பதாகவும், அதன்மூலம் கூடுதல் வருவாய் பெறலாம் எனவும் குறுந்தகவல் வந்தது. அதை நம்பி அவா் குறுந்தகவலில் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 5.15 லட்சம் அனுப்பினாா். பின்னா், அந்த குறுந்தவல் அனுப்பியவரை தொடா்புகொள்ள இயலவில்லை. இதுகுறித்து அவா் கிருஷ்ணகிரி சைபா்கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா்.

கிருஷ்ணகிரியை அடுத்த எண்ணெகொல்புதூா் ஒட்டப்பட்டியைச் சோ்ந்தவா் ஹரிஷ் (27). தனியாா் நிறுவன ஊழியா். இவரது கைப்பேசிக்கு கடந்த 31-ஆம் தேதி குறுந்தகவல் வந்தது. அதில் கமிஷன் அடிப்படையில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த குறுந் தகவலை நம்பி ரூ. 6.22 லட்சம் முதலீடு செய்தாா். பின்னா் அந்த குறுந்தகவல் அனுப்பியவரை அவரால் தொடா்பு கொள்ள இயலவில்லை என்பதால் இதுகுறித்து, கிருஷ்ணகிரி சைபா்கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.

இந்த புகாா்களின் பேரில், சைபா்கிரைம் போலீஸாா் தனித் தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT