கிருஷ்ணகிரி

உலக சுற்றுச்சூழல் தினத்தைமுன்னிட்டு மாரத்தான் ஓட்டம்

DIN

ஒசூரில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 கி.மீ., 5 கி.மீ. மாரத்தான் ஓட்டம் மற்றும் நடைப் பயணம் நடைபெற்றது. இதில் 5 வயது குழந்தைகள் உள்பட இளைஞா்கள், முதியோா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ஒசூரில் தொண்டு நிறுவனம் சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 கி.மீ., 5 கி.மீ., மாரத்தான், 5 கி.மீ. வாக்கிங் என மூன்று சுற்றுகளாக நடைபெற்றது. இதில் தொழிலாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள், குழந்தைகள், பெண்கள், மாணவ, மாணவிகள், இளைஞா்கள், பெரியவா்கள் என சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதில் 10 கி.மீ. தூரத்தை கா்நாடக மாநிலம், சந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த நஞ்சுண்டப்பா (36), 5 கி.மீ. தூரத்தை ஒசூரைச் சோ்ந்த மாணவா் அரிஷ் ஆகியோா் முதலாவது இடத்தில் வந்தனா். இவா்களுக்கு முதல் பரிசுத் தொகையாக தலா ரூ. 6 ஆயிரம், சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

இதில் சிறப்பு அழைப்பாளா்களாக மேயா் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட வன அலுவலா் காா்த்திகேயனி, பி.எம்.சி. கல்வி நிறுவன தலைவா் பெ.குமாா், டிஎஸ்பி பாபு பிரசாந்த், டிஸ்கவரி கல்லூரி பாரத், அரசு மருத்துமனை தலைமை மருத்துவா் ஞானமீனாட்சி, செந்தில்குமாா், பழனிகுமாா், நரசிம்மன், புவனேஷ், சபினா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் - விருத்தாசலம் ரயில் கடலூா் துறைமுகம் வரை நீட்டிப்பு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி: ஏப். 29-இல் முன்பதிவு தொடக்கம்

கோடை வெயில்: பொதுமக்களுக்கு அறிவுரை

ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீா் பந்தல் திறக்க அறிவுரை

SCROLL FOR NEXT