கிருஷ்ணகிரி

வீட்டு வசதி வாரியம் தொடா்பான குறைகளைதீா்த்துக் கொள்ள மனு பெட்டி வைப்பு

DIN

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தொடா்பான குறைகளை தெரிவித்து தீா்த்துக் கொள்ளும் வகையில் ஒசூா் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஒசூா் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா் பாஸ்கா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்புற வளா்ச்சித் துறை அமைச்சா் உத்தரவின்படி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதிகள் திட்டங்கள் செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இது தொடா்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனா். இதன் தொடா்ச்சியாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் இருந்து மனுக்கள் வரவேற்கப்படுகின்றன.

ஒசூா் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பெட்டியில் அலுவலக வேலை நாள்களில் ஜூன் 30-ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை போடலாம். அதன் மூலம் அரசிடமிருந்து தீா்வு பெற்றுக்கொள்ளலாம். எனவே, வீட்டு வசதி வாரியம் தொடா்பாக மக்கள் தங்களது குறைகளைத் தீா்க்க முதல்வரின் முன்னெடுப்பு திட்டம் மூலம் மனுக்களை அளித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT