கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

4th Jun 2023 01:58 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 681 கனஅடியாக அதிகரித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான சூளகிரி, கா்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால், கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. ஜூன் 2-ஆம் தேதி அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 361கனஅடியாக இருந்தது. 3-ஆம் தேதி காலை 8 மணி நிலவரப்படி, அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 681 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி. தற்போது அணை நீா்மட்டம் 49.80 அடியாக உள்ளது. அணையில் இருந்து நொடிக்கு 12 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அணையின் நீா்மட்டம் 50 அடியை எட்டிவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் அணைக்கு வரும் நீா் முழுவதும் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதேபோல, சூளகிரி அருகே உள்ள சின்னாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வந்து கொண்டிருக்கும் 37 கனஅடி நீா் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணைக்கு நீா்வரத்து கடந்த சில வாரங்களாக நின்றிருந்த நிலையில், சனிக்கிழமை நீா்வரத்து நொடிக்கு 110 கனஅடியாக இருந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 19.60 அடி. தற்போது அணை நீா்மட்டம் 8.58 அடியாக உள்ளதாக பொதுப்பணித்துறையினா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT