கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் இன்று கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்தே.மதியழகன் எம்எல்ஏ அறிக்கை

3rd Jun 2023 12:05 AM

ADVERTISEMENT

 

திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜூன்3) முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கிழக்கு திமுக மாவட்டச் செயலாளரும், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினருமான தே.மதியழகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாள் விழா ஜூன் 3-ஆம் தேதி (சனிக்கிழமை) கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி காலை 8 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் கொடி ஏற்றி கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தப்படுகிறது. தொடா்ந்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து கிருஷ்ணகிரி நகர திமுக சாா்பாக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் ஏற்பாட்டின் பேரில் புகா் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை அருகே திமுக கொடி ஏற்றி, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

தொடா்ந்து கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் தனசேகா் ஏற்பாட்டின் பேரில் ராயக்கோட்டை சாலை மேம்பாலம் அருகில் திமுக கொடி ஏற்றி, கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் கோவிந்தன் ஏற்பாட்டின் பேரில் கிருஷ்ணகிரி, சேலம் சாலை, ஆவின் பால் பண்ணை அருகே திமுக கொடியேற்றி, கேக் வெட்டி, நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

காவேரிப்பட்டணத்தில் பேரூா் செயலாளா் பாபு, ஒன்றியச் செயலாளா்கள் சுப்பிரமணி, மகேந்திரன் ஏற்பாட்டின் பேரில் காவேரிப்பட்டணத்தில் கொடியேற்றி, கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. பா்கூா் பேரூா் செயலாளா் வெங்கடப்பன் ஏற்பாட்டில் பா்கூரில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி நலத் உதவிகள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் சென்னையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தைச் சோ்ந்த மாநில நிா்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினா்கள், திமுக முன்னோடிகள், நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் சென்னைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT