கிருஷ்ணகிரி

உரிமமின்றி கிரானைட் கல் பாரம்ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

2nd Jun 2023 12:03 AM

ADVERTISEMENT

உரிமமின்றி கிரானைட் கல் பாரம் ஏற்றி சென்ற லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி, கனிமவள பிரிவு உதவி இயக்குநா் பொன்னுமணி தலைமையிலான குழுவினா் அச்சமங்கலம் ஏரிக்கரை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்ததில் 35 டன் எடை கொண்ட ஒரு ராட்சத கிரானைட் கல், ஏற்றப்பட்டு கடத்திச் செல்ல முயற்சிப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, அரசு அலுவலா் அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியுடன் கிரானைட் கல்லைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT