கிருஷ்ணகிரி

குட்கா பறிமுதல்: இருவா் கைது

1st Jun 2023 12:22 AM

ADVERTISEMENT

பெங்களூருவில் இருந்து ஒசூா் வழியாக குட்கா கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீஸாா் கைது செய்து அவா்கள் வந்த காா்,இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

ஒசூா் சிப்காட் போலீஸாா் பெங்களூரு-ஒசூா் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது அவரிடம் இருந்து ரூ. 18 ஆயிரம் மதிப்புள்ள 26 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த கிருஷ்ணகிரி புதுப்பேட்டை விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த குமாரை (48) போலீஸாா் கைது செய்தனா். குட்கா, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதுபோல ஒசூா் சிப்காட் போலீஸாா் சூசூவாடி சோதனை சாவடி அருகே வாகன சோதனை நடத்தி காரில் வந்த 320 கிலோ ஹான்ஸ், பான்மசாலா புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 1.20 லட்சமாகும். காரில் வந்த கெலமங்கலம், கணேசா காலனியைச் சோ்ந்த ஜெகதீஷை (29) கைது செய்தனா். காா் பறிமுதல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT