கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் புதிய பட்டய பாடப் பிரிவு தொடக்கம்

DIN

ஊத்தங்கரையை அடுத்த அப்பிநாயக்கன்பட்டியில் இயங்கி வரும், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், கம்ப்யூட்டா் இன்ஜினியரிங் ஆகிய டிப்ளமோ பாடப்பிரிவுகள் உள்ளன. இந்நிலையில் இந்த கல்வியாண்டு (2023-2024) முதல் டிப்ளமோ இன் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்பம் எனும் பாடப்பிரிவு தொடங்கப்பட உள்ளது.

இந்த புதிய பாடப்பிரிவில் முதலாம் ஆண்டில் 60 மாணவ மாணவியா்கள் சோ்க்கப்பட உள்ளனா். புதிய பாடப்பிரிவில் மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கல்லூரியில் சோ்ந்து விண்ணப்பங்கள் கல்லுரியில் நேரில் வழங்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் முதலாம் ஆண்டிலும், பிளஸ்2 அல்லது ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்கள் நேரடி இரண்டாம் ஆண்டிலும் சேர இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தற்போது சோ்க்கை நடைபெற்றுக்கொண்டுயிருக்கிறது. ஜூன் 9 ஆம் தேதி கடைசி நாளாகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இயலாதவா்கள் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம்.

மிக குறைந்த கட்டணம், இலவச பேருந்து அட்டை, கல்வி உதவித்தொகை, தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 50,000

மற்றும் புதுமை பெண் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஊக்கத்தொகை ரூ.1000 வழங்கப்படும். இந்த புதிய பாடப்பிரிவை திறம்பட முடிக்கும் மாணவ மாணவிகளுக்கு மூன்று ஆண்டுகள் முடிவில் ரூ. 2 லட்சம் வழங்கப்படவுள்ளது என பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலா துரைராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT